மனிதநேயத்துடன் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம்!

By காமதேனு

உயிருக்கு போராடியவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. குடியரசு தினவிழாவில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருது மற்றும் காசோலை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.

வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சிறந்த விவசாயிகளுக்கான விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 2022ஆம் ஆண்டுக்கான வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம் 8 பேருக்கு வழங்கப்பட்டது.

உயிருக்கு போராடியவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இதேபோன்று திருவொற்றியூரில் கட்டட விபத்தின்போது அச்சமின்றி காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட தனியரசுக்கு விருது வழங்கப்பட்டது.கோவை வனக்காவல்நடை உதவி மருத்துவர் அசோகன், மதுரை அருகே கார் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய கார் ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக காவலர்கள் 5 பேருக்கு காந்தியடிகள் விருதினை முதல்வர் வழங்கினார். உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சக்தி, முசிறி எஸ்.ஐ. சிதம்பரம் உள்ளிட்டோருக்கு காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE