டெல்லியில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி சென்னையில் அணிவகுப்பு!

By காமதேனு

73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார். டெல்லியில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இந்தியாவின் 73வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது வருகிறது. தமிழகத்தில் சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆளுநர் கொடியேற்றியதும் ஹெலிகாப்டரில் இருந்து மூவர்ணக்கொடி மீது மலர்கள் தூவப்பட்டன.

இதன் பின்னர் முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். 30 நிமிடத்தில் விழா நிறைவடைந்தது. கரோனா பரவல் காரணமாக இந்தாண்டு குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகள் சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அணி வகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் சிலைகள் இடம் பெற்றிருந்தன.

வஉசி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன் உள்ளிட்டவர்களின் சிலைகளும், பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகளும் இடம் பெற்றிருந்தன. அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்தி இடம் பெற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE