சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறை

By KU BUREAU

திருநெல்வேலி/சென்னை: திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்புத் திருணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கட்சி அலுவலக கண்ணாடிகள், நாற்காலிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23), பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதன் (28) ஆகியோர் நேற்று முன்தினம் கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

புதுமணத் தம்பதியர் பாளையங்கோட்டையில் ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பெண்ணின் உறவினர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் அங்கு நேற்று மாலை திரண்டுவந்தனர்.

அவர்களுடன் செல்ல மணப்பெண் மறுத்ததால், கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கட்சி அலுவலக கண்ணாடிகளையும், நாற்காலிகளையும் உடைத்ததுடன், கட்சி நிர்வாகிகளையும் தாக்கியுள்ளனர். இதில், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அருள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழுஉறுப்பினர் கே.பழனி ஆகியோர்காயமடைந்து, நெல்லை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, மாநகர காவல்துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா, அங்கு விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் வழக்குபதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடிவருகின்றனர்.

மாநில செயலாளர் கண்டனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர்கே.பாலகிருஷ்ணன்நேற்று வெளியிட்ட அறிக்கையில், காவல் துறையினர்முன்பாகவே கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தி, நிர்வாகிகளை தாக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காதல் தம்பதிக்கு உரியபாதுகாப்புவழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE