அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு!

By காமதேனு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை 7.30 மணி முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில், இந்த சோதனை நடத்தப்படுகிறது.

கே.பி.அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களில் சொத்துகள் வாங்கியுள்ளதாகவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கேபி அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE