கட்சிப் பொறுப்பில் இருந்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விடுவிப்பு!

By காமதேனு

திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைவரிடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ நியமிக்கப்படுகிறார்.

அயலக அணிச் செயலாளராக பணியாற்றி வந்த டி.ஆர்.பி.ராஜா கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எல்.அப்துல்லா அயலக அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE