6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை!

By காமதேனு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் வானம் மேமூட்டத்துடன் காணப்பட்டது. இதன் பின்னர் மழை வெளுத்து வாங்கியது. சென்னை அம்பத்தூரில் 5.7 செமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னை மெரினா, மந்தைவெளி, வேப்பேரி, பெரியமேடு, மெரினா, மந்தைவெளி, கோடம்பாக்கம், கிண்டி, கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது

இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE