விறுவிறுப்புடன் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

By காமதேனு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்க‌ளுக்கு தங்கக்காசு வழங்கப்பட்டு வருகிறது. முதல் சுற்று முடிவடைந்த நிலையில் 2-வது சுற்று களைகட்டியுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் கடந்த 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டியை நேரில் காண, 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போட்டியில் சிறந்த காளைக்கு, முதல்வர் சார்பிலும் சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் கார் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், கிரைண்டர், குக்கர், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கக்காசு வழங்கப்பட்டு வருகின்றன. முதல் சுற்று முடிவடைந்த நிலையில் 2-வது சுற்று நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE