‘திருவள்ளுவரின் பன்முகத்தன்மை தனித்து நிற்கின்றன’

By காமதேனு

“திருவள்ளுவரின் பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்துக்காக அவை தனித்து நிற்கின்றன” என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்துக்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியைப் பகிர்கிறேன்” என்று கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக ஆளுநர் ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE