சென்னையில் இரவு நேரத்தில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்!

By காமதேனு

சென்னையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை இரவு நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். சாலைகளின் தரம் குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்த முதல்வர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் வீரியம் அடைந்திருந்த நேரத்தில் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், பம்பரமாய் சுழன்று வருகிறார். காவல் நிலையம், அரசுப் பள்ளிகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்ட பகுதிகளில் நேரிடையாக சென்று முதல்வர் ஆய்வு செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் நேரிடையாகவே சென்று முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு, தேங்கியிருந்த மழை நீரை உடனே வெளியேற்ற உத்தரவிட்டார். அதன்படி மழை நீரை உடனடியாக வெளியேற்றினர் அரசு அதிகாரிகள். இரவு நேர ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்தி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைப் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

எந்த நேரத்தில் எந்த பகுதிக்கு வந்து ஆய்வு நடத்துவார் என்று யாரும் அறியாத வகையில் இரவு நேரத்தில் களமிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை நேற்றிரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம் சாலைகளின் தரம் மற்றும் சாலையின் அளவு குறித்து கேட்டறிந்தார். பின்னர் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE