அமித் ஷா என்னிடம் பேசியது என்ன? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

By KU BUREAU

சென்னை: தேர்தலுக்குப் பிந்தைய தொடர் நடவடிக்கைகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்பதற்காகவே தன்னை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்ததாக தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடந்து செல்லும்போது, அமித் ஷா தமிழிசையை அழைத்து சில நிமிடங்கள் பேசினார். இதையடுத்து, அமித் ஷா தமிழிசையை கண்டித்ததாக செய்தி வெளியானது.

இதுதொடர்பாக நேற்று தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். அப்போது, தேர்தலுக்குப் பிந்தைய தொடர் நடவடிக்கைகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்பதற்காகவே என்னை அழைத்தார். நானும் அது தொடர்பாக அவரிடம் விரிவாக எடுத்து கூறினேன். அவர் அந்த நேரத்தில் அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கியது உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இதன் மூலம் தேவையற்ற யூகங்களை தெளிவுபடுத்தியுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE