பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட முதல்வர்!

By காமதேனு

தானும் ஒரு முன்களப் பணியாளர்தான் என்ற முறையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் எனப்படும் 3-வது தவணை கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கின. தமிழ்நாட்டில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று முதல் தொடங்கின.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார்.

இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பதிவில், ''அனைத்து முன்களப் பணியாளர்களும், இணைநோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE