பறிமுதல்செய்த பொருட்களை காப்பகங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய போலீஸார்!

By ரஜினி

பிரபல நிறுவனங்கள் பெயரில் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ரூ.4.5 லட்சம் மதிப்புடைய ஆடைகள் மற்றும் பள்ளி மாணவர் பைகளை பறிமுதல் செய்து, நீதிமன்ற வழிகாட்டல்படி காப்பகங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு போலீஸார் வழங்கினர்.

சென்னையில் லூயிஸ் ஃபிலிப், பூமா, அடிடாஸ் போன்ற முதன்மையான பிராண்டட் நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி போலியாக பல்வேறு ரக ஆடைகள், பள்ளி மாணவர் பைகளைத் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக வந்தப் புகாரை அடுத்து, சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4.5 லட்சம் மதிப்புடைய பல்வேறு ரக ஆடைகள், பள்ளி மாணவர் பைகள் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த ஆடைகளையும் பள்ளி மாணவர் பைகளையும் தொண்டு நிறுவனங்களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், வழங்கலாம் என்ற நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழக குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி, மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், பறிமுதல் செய்தவற்றை திரு.வி.க நகரில் உள்ள தனியார் அறக்கட்டளை, செங்குன்றத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம், செங்கல்பட்டு தனியார் குழந்தைகள் காப்பகம் மற்றும் தனியார் ஆதரவற்றோர் இல்லங்கள் என 4 அமைப்புகளுக்குப் போலீஸார் பகிர்ந்து வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE