உலகளவில் இதுவரையில்லாத கரோனா பாதிப்பு: அமைச்சர் எச்சரிக்கை!

By காமதேனு

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் இதுவரை கண்டிராத கரோனா தொற்றுப் பரவலுக்கு ஆளாகியிருப்பது குறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிகை விடுத்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களுடனான சந்திப்பில் இதனை பகிர்ந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘அதிகரித்து வரும் கரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள தினசரி இரவு மற்றும் ஞாயிறு முழுநாள் பொதுமுடக்கங்களை, பொதுமக்கள் பொறுப்போடு பின்பற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை சரவணா ஸ்டோர்ஸ் போன்ற தனியார் வணிக வளாகங்கள் கரோனா தொற்றின் பரவல் மையமாக இருந்ததது கூறித்து பேசும்போது, ‘தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்கள் அனைவரும் இரண்டுடோஸ் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்வதுடன், வாடிக்கையாளர்கள் மத்தியில் அவற்றை சரிபார்க்கவும் , கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறும்’ கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில், இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவில் கரோனா பரவல் புதிய உச்சம் தொட்டு வருவதாக அவர் கவலை தெரிவித்தார். “கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 2019 முதல் இதுவரையில்லாத தொற்று, கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்தாண்டு ஏப்ரல் 25 அன்று ஒரே நாளில் சுமார் 9 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தார்கள். அவற்றையெல்லாம் மிஞ்சிய வகையில் கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் சுமார் 26 லட்சம் நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்துகொள்வதன், தங்களை பாதுகாத்துக்கொள்வது மட்டுமன்றி அரசுக்கும் உதவ முடியும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE