தமிழகக் கோயில்களை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு

By காமதேனு

தமிழகத்தில் கோயில்களை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும் பராமரிப்புகளை செம்மைப்படுத்தவும் இந்தக் குழு செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் இக்குழுவின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணைத் தலைவராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிவழி அலுவல் வழி உறுப்பினர்களாக இந்து சமய அறநிலையத்துறை செயலர், ஆணையர் ஆகியோர் செயல்படுவர்.

இந்தக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி, ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஓய்வுபெற்ற நீதிபதி டி.மதிவாணன், முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கருமுத்து கண்ணன், இராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், ஸ்ரீமதி சிவசங்கர், மல்லிகார்ஜூன சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE