சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகளுக்கு திருமணம்

By காமதேனு

திரைப்பட பைனான்சியரான அன்புச்செழியன் மகள் சுஷ்மிதாவுக்கும், ராஜேந்திரன் ஐஏஎஸ் மகன் சரண் என்பவருக்கும் பிப்.21 அன்று திருமணம் நடைபெற உள்ளது.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், ஃபைனான்சியர் மற்றும் திரையரங்கு உரியமையாளர் என பன்முகம் கொண்டவர் அன்புச்செழியன். இவரது மகளும் கோபுரம் சினிமாஸ் உரிமையாளருமான சுஷ்மிதாவுக்கும், சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் சரண் என்பவருக்கும் இடையே திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெறவுள்ளது.

அன்புச்செழியன்

மணமகள் சுஷ்மிதா, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலைப் பட்டமும், முதுநிலையில் எம்பிஏவும் முடித்துள்ளார். இளம் தொழில்முனைவோராக பிரகாசிக்கத் தொடங்கிய சுஷ்மிதா 25 வயதில், 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகிப்பவராக வளர்ந்துள்ளார். மணமகன் சரண், குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனமான சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் ராஜேந்திரனின் மகனாவார். ராஜேந்திரன் ஐஏஎஸ், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிடெக் மற்றும் எம்பிஏ முடித்துள்ள சரண், சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநராக உள்ளார்.

பிப்.21 அன்று காலையில் திருமணமும், மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக இருவீட்டார் தெரிவித்துள்ளனர். மேலும், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள், கோவிட் விதிமுறைகளை பின்பற்றியே நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE