உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு அமைச்சர் ரகுபதி ரூ.4 லட்சம் நிதி

By காமதேனு

புதுக்கோட்டை, நார்த்தாமலை பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சிறுவன் புகழேந்தி குடும்பத்துக்கு தமிழக அமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார்.

புதுக்கோட்டை, நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடந்த பயிற்சியின்போது தவறுதலாக வீட்டுக்குள் உணவருந்திக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் புகழேந்தியின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், மருத்துவச் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனான்.

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுவனின் உடல் இன்று மதியம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புகழேந்தியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சட்டத் துறை அமைச்சர், முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று புகழேந்தியின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். அப்போது அமைச்சர் ரகுபதி, கூடுதலாக, புகழேந்தியின் குடும்பத்தினருக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE