ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு நாளை மறுநாள் விசாரணை

By காமதேனு

முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரிய மனு, நாளை மறுநாள்(ஜன.6) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

பணமோசடி புகாரில் தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளார். அவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் துறை மும்முரமாக செயல்பட்டது. ஆனால் அவரைப் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், புகார்களின் அடிப்படையில் தான் கைதாவதைத் தவிர்க்க நினைத்த ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் ராஜேந்திர பாலாஜி. ஆனால் உச்ச நீதிமன்றம் குளிர்கால விடுமுறையில் இருந்ததால், வழக்கு பட்டியலிடப்படாமல் இருந்தது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், முறையீடு வழக்கை உடனடியாக விசாரணைக்கு கொண்டுவர ராஜேந்திர பாலாஜி தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள்(ஜன.6) ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக அவரை எப்படியும் கைது செய்துவிடும் முனைப்பில் காவல் துறையும் தீவிரம் காட்டிவருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE