பெரியார் திடலில் கரோனா சிறப்பு சித்த மருத்துவ மையம்

By காமதேனு

கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்திடும் வகையில், சென்னை பெரியார் திடலில் கரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் நாளை(ஜன.4) காலை திறக்கப்பட இருக்கிறது.

சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில், சித்த மருத்துவத்துக்கான கரோனா சிகிச்சை மையம் திறக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பொருத்திய படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டமைப்பை மேம்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

நாளை (ஜன.4) காலை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனச் செயலாளர் கி.வீரமணி பங்கேற்கிறார். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தைத் திறந்துவைக்கிறார்.

மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன், எழும்பூர் எமஎல்ஏ இ.பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் சு.கணேஷ் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE