சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ததால் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதால், இன்று 4 மாவட்டங்களில் மட்டும் அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த பெருமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில் இந்த 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்டின் இறுதி நாளான இன்றும், 2022 புத்தாண்டின் தொடக்க நாளான நாளையும் தொடர்ந்து நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளன. அதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவும், தொற்று பராவாதிருக்க நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.