திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து விபத்து!

By ரஜினி

சென்னை திருெவொற்றியூர் அரவாகுளம், கிராம தெருவில் இடிந்து விழுந்த குடிசைமாற்று வாரிய வீடுகளில் வசித்தவர்களுக்கு மாற்றுவீடுகள் வழங்கபப்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் அரவாகுளம், கிராம தெருவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கடந்த 1993-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்டது. இங்குள்ள 14 அடுக்குமாடி குடியிருப்புகளில் 336 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2000 பேர் வசிக்கின்றனர்.

சுமார் 26 வருடங்கள் பழமையான இக்குடியிருப்பு பலத்த சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 3 அடுக்கு கொண்ட D பிளாக்கில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து 24 குடியிருப்பு வாசிகள் உடனே குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள் அந்தக் குயிருப்பில் வசித்த மக்களை இரவோடு இரவாக வெளியேற்றினர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அக் குடியிருப்பானது பூழிக்குள் ஒரு அடி அளவுக்குப் புதைத்து. இதனால் பழடைந்த அக்கட்டிடம் திடீரென இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் மற்றும் போலீஸார் அப்பகுதி மக்களை பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் கற்கல் சிதறியதில் சிலர் லேசான காயமடைந்தனர். இந்நிலையில், தீயணைப்பு வீரர்களும் போலீஸாரும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் வீடுகள் இடிந்து விழுந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், வீடு இழந்த 24 பேருக்கும் மூன்று நாட்களில் மாற்று வீடு வழங்கப்படும் என்றும் இடிந்த வீடுகள் விரைவில் கட்டித்தரப்படும். வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE