’சீமான் காட்டிய பொருளுக்கு உரிய மரியாதைதான் அவருக்கும்’ என்று சீமானை சாடியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று(டிச.25) சந்தித்தார். பின்னர் காத்திருந்த பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
”முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்தேன். ராகுல்காந்தியை பிரதமராக முன்மொழிந்தவர் தமிழக முதல்வர். தமிழகத்தில் திமுக காங்கிரஸ் இடையிலான கூட்டணி வலுவாக உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று பதிலளித்து வந்த இளங்கோவனிடம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் காலணி காட்டியது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஈவிகேஎஸ்.இளங்கோவன், ”காட்டிய பொருளுக்கு என்ன மரியாதையோ, அதே மரியாதைதான் அவருக்கும்” என்று தனது பாணியில் கூறிச் சென்றார்.