உத்கிரிஸ்ட் சேவா பதக்கம் பெறும் தமிழக ‘உளவுத்துரைகள்’

By காமதேனு

மத்திய, மாநில காவல் துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களில், 15 முதல் 25 ஆண்டுகள் பணி அனுபவத்துடன், சிறந்த மற்றும் அப்பழுக்கற்ற வகையில் சேவையாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் 2 வகையான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

உத்கிரிஸ்ட்சேவா பதக் மற்றும் அதி உத்கிரிஸ்ட் சேவா பதக் ஆகிய பெயர்களில் இந்த பதக்கங்கள், மத்திய உள் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், கடந்த 2018 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் இந்தப் பதக்கத்துக்கு, நடப்பாண்டு தமிழகத்திலிருந்து தேர்வானோர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் அதி உத்கிரிஸ்ட் சேவா பதக் பட்டியலில் 74 பேரும், உத்கிரிஸ்ட்சேவா பதக் பட்டியலில் 129 பேரும் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தகவலை தமிழக காவல் துறை தலைவர் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE