முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது; 24-ம் தேதி விழாவில் திருமா வழங்குகிறார்

By காமதேனு

டிசம்பர் 24-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடக்கும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘அம்பேத்கர் சுடர் விருது’ வழங்கி கவுரவிக்கிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.

அரசியல் தளத்திலும் பிற துறைகளிலும் சிறந்த பங்களிப்பைத் தரும் நபர்களை, ஆண்டுதோறும் தலைவர்கள் பெயரில் விருதளித்து கவுரவித்து வருகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, டிச.24-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கிறது.

இந்த விழாவில், இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பெரியார் விருது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், காமராஜர் கதிர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான நெல்லை கண்ணனுக்கும் வழங்கப்படுகிறது.

அதேபோல், அயோத்திதாசர் ஆதவன் விருது குடியரசு கட்சி தலைவர் பி.வி.கரியமாலுக்கும், காயிதேமில்லத் பிறை விருது பஷீர் அகமதுவுக்கும், செம்மொழி ஞாயிறு விருது ராமசாமிக்கும் வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE