மதுரையில் பெண்களுக்கு தனி ‘பார்’ திறப்பா?

By கே.எஸ்.கிருத்திக்

‘மதுக் கடைகளால் தமிழக இளைஞர்களும், பல குடும்பங்களும் சீரழிந்துவருவதாகவும், அரசே மதுக் கடைகளை நடத்துகிற போக்கை நிறுத்த வேண்டும்’ என்று பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், மதுரையில் பெண்களுக்கென தனியாக பார் திறக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அதை முன்னிட்டு, தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்து பலர் எழுதிவருகிறார்கள். குறிப்பாக பாஜகவினர் இணையத்தில் புரட்சியே நடத்திவருகிறார்கள்.

உண்மையில் அந்தச் செய்தி, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் இறுதியில் அறிவிக்கப்பட்டு, டிச.1-ம் தேதி பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி. அந்தச் செய்தியில் ஆண்டு இல்லை என்பதால், புதிய செய்தி போலவே அதைப் பகிர்வதும், அதை முன்னிட்டு அரசைக் கண்டிப்பதும் இணையத்தில் தொடர்கிறது.

அந்த பார், மதுரையின் பிரபலமான தனியார் வணிக வளாகமான விஷால் டி மாலில் தொடங்கப்படவிருந்தது. அப்போது எழுந்த எதிர்ப்பு காரணமாக திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. தற்போது தீயாகப் பரவும் வதந்தியால், தங்களுக்கு மிரட்டல் ஏதும் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள் மால் நிர்வாகிகள்.

அந்த வணிக வளாகம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE