சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு!

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்ய வந்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுரை எம்.பி, சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியது சர்ச்சையானது. இதைக் கண்டித்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர்கள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டார்கள்.

இதைத் தொடர்ந்து அச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் திரு. கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனிமேல் இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE