மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து: முதல்வர் வரவேற்பு !

By காமதேனு

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அறிவித்த வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

‘மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்!

மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!

உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத் தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து, "இந்தியா காந்தியின் மண்" என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!’ என்று பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE