கேரள கண்ணனூர் - கர்நாடக பெங்களூர் இடையிலான, கண்ணூர்-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (நவ.12) அதிகாலை சேலம்-தர்மபுரி இடையே தடம்புரண்டது. நல்வாய்ப்பாக பயணிகள் உட்பட எவருக்கும் பாதிப்பு எதுவும் இல்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி எல்லைக்கு உட்பட்ட தொப்பூர் வனப்பகுதியை கடைக்கையில், அதிகாலை 3.50 மணியளவில் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன. மழையால் நேரிட்ட மண்சரிவு காரணமாக, தண்டவாளத்தின் அருகே கிடந்த பெரிய பாறைகளின் மீது ரயில் பெட்டிகள் மோதியது சம்பவத்துக்கான காரணமாக தெரியவருகிறது.
உடனடியாக, ரயில் பயணிகள் 2,348 பேரும் பேருந்துகள் மூலகமாக வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டனர். ரயில்வே அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். சேலம் - தர்மபுரி தடத்தின் ரயில் சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.