தனியார் துறையில் மண்ணின் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு

By காமதேனு

தனியார் துறை வேலைவாய்ப்பில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஹரியாணா அரசு பிறப்பித்துள்ளது. இந்த நடைமுறை 2022, ஜனவரி முதல் அமலாகும்.

மனோகர் லால் கட்டார்

ஹரியாணா மாநிலத்தில், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் சொந்த மாநிலத்தோர் புறக்கணிக்கப்படுவதாக நீண்டகால குற்றச்சாட்டு இருந்தது. இதையொட்டி, மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு சிறப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதன்படி, ஹரியாணா தனியார் துறை வேலைவாய்ப்புகளில் அந்த மாநிலத்தோருக்கு 75% ஒதுக்கீடு, பணியாளர்களுக்கான ஊதியத்தில் குறைந்தபட்ச உத்திரவாதம் ஆகியவை வரையறுக்கப்பட்டிருந்தன. கரோனா காரணமாகவும், சில தனியார் நிறுவனங்களின் இழுத்தடிப்பாலும் தள்ளிப்போன இந்தச் சட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களிலும், தனியார் வேலைவாய்ப்பில் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வருகிறது. ஹரியாணா அதை சாதித்திருப்பது, இதர மாநிலங்களிலும் அந்தக் கோரிக்கை வலுப்பெற வாய்ப்பாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE