புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத் திடலில் இன்று (நவ.2) நடைபெற்றது. இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில், அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான், காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், அரசு செயலாளர் ஜகந்நாதன், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர்.