விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக். 6 மற்றும் 9-ல் உள்ளாட்சித் தேர்தல்

By காமதேனு டீம்

தமிழகத்தில், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று அறிவித்தார். அதன்படி புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், அக்டோபர் 6 மற்றும் 9 என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 15 முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெறப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22. வேட்புமனு தொடர்பான ஆய்வு செப்டம்பர் 23 -ல் நடைபெறும். வேட்புமனுவைத் திரும்ப பெற செப்டம்பர் 25 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 12-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE