கோவை: கோவையை அடுத்த மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட நல்லூர்வயல் கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை 3 வீடுகளின் மேற்கூரையை சேதப்படுத்தியது.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கிராமப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பல நேரங்களில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து வருகிறது. அப்படி புகுந்த ஒற்றை யானை ஒன்று காருண்யா கல்லூரி அருகே நல்லூர்வயல் கிராமத்தில் 3 வீடுகளின் மேற்கூரைகளை நேற்று இரவு சேதப்படுத்தியது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
» ‘மாட்டு வண்டியில் மணல் அள்ளுபவர்களுக்கு தனியாக மணல் குவாரி’ - சிஐடியு வலியுறுத்தல்
» மத்திய மண்டலத்தில் ஜொலிக்காத பாஜக கூட்டணி - ஏழிலும் டெபாசிட் இழப்பு!