வானகரம் சோலார் பேனல் கம்பெனியில் தீ விபத்து

By காமதேனு டீம்

சென்னை, திநகர் பகுதியில் வசிப்பவர் மணி. இவர் வானகரம் முஸ்தபா தெருவில் ‘மார்டன் அல்ட்ரா சோலார் எனர்ஜி’ என்ற பெயரில், இருசக்கர வாகனங்களை அசெம்பிளிங் செய்வதுடன் சோலார் பேனல் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். நேற்று வழக்கம்போல் பணிமுடிந்து ஊழியர்கள் கம்பெனியை மூடிவிட்டுச் சென்றனர்.

இன்று அதிகாலை, திடீரென கம்பெனியில் இருந்து கரும் புகை வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வானகரம், அம்பத்தூர், கோயம்பேடு ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தத் தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புமிக்கப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்தச் சம்பவம் குறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE