இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு!

By காமதேனு டீம்

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரை, டெல்லி போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சுகேஷ் சந்திரசேகர்

இந்த வழக்கில் கைதான அருண் முத்து, கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், மோகன்ராஜ் ஆகியோரை விசாரணைக்காக கஸ்டடியில் எடுத்த டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி மூலமாக சம்பாதித்த பணத்தையும் கார்களையும் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நால்வரையும் சென்னை அழைத்து வந்தவர்கள், மாம்பலம் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE