மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து!

By காமதேனு டீம்

சென்னை:

தூக்க கலக்கத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததால், மேம்பாலத்தில் மோதி இளைஞர் உயிரிழந்தார்.

சென்னை, அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (24). இவர், வேளச்சேரியில் உள்ள ஓட்டல் ஓன்றில் சப்ளையராக பணியாற்றி வந்தார். நேற்று பணிக்குச் சென்ற சந்தோஷ், இன்று அதிகாலை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். பாண்டிபஜார் உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலத்தில் அவர் வந்து கொண்டிருக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மேம்பால பக்கவாட்டு சுவரின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சந்தோஷ், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து போலீஸார் சந்தோஷ் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சந்தோஷ் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இருசக்கர வாகனம் மேம்பாலத்தின் மீது மோதி விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE