நாம் தமிழர் கட்சிக்கு மறுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்துக்கு 80 ஆயிரம் வாக்கு

By KU BUREAU

சென்னை: மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வழங்க மறுக்கப்பட்ட ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால் இந்த முறை அவர்களது விருப்ப சின்னமான கரும்பு விவசாயிகள் சின்னமின்றி ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட்டது. ‘கரும்பு விவசாயி’ சின்னமானது வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும், வேறு சில சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. இதில் போட்டியிட்ட 40 தொகுதி களிலும் நாம் தமிழர் கட்சி தோல்வி அடைந்திருந்தாலும், 8.16 வாக்கு சதவீத வாக்குகளுடன் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்று கவனம் ஈர்த்தது. அதேநேரம், முன்புநாம் தமிழர் கட்சியின் சின்னமாகஇருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேலூர், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய 5 இடங்களிலும், 13 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், ‘கரும்பு விவ சாயிகள்’ சின்னத்துக்கு ஒட்டு மொத்தமாக 79,203 வாக்குகள் விழுந்துள்ளன. குறிப்பாக 7 இடங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திருப்பூர் தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் நின்ற சுயேட்சை வேட்பாளருக்கு 7,125 வாக்குகள் கிடைத்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE