அதிமுக ஒன்றிணைய வேண்டி எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளில் பிரார்த்தனை: கு.ப.கிருஷ்ணன் தகவல்

By KU BUREAU

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது வருத்தமாக உள்ளது. அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாகதேர்தலை சந்தித்தால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் ஆட்சி அமைக்க முடியும்.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த ஜெயலலிதா, `வாழ்நாளில் இனி ஒருபோதும் அந்த தவறை செய்யமாட்டேன்' என்று கூறினார். அவர் சொன்னதை ஏற்று, அதிமுக செயல்பட வேண்டும். கட்சியை ஒன்றுபடுத்தும் சக்தி படைத்த யாராக இருந்தாலும், அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார்.

அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்புக் குழுவைத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவையே எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார். அப்படி போட்டியிட வேண்டாம் என்று கூறியும், அவர்கேட்கவில்லை. எனவே, அதிமுகஒன்றிணைய வேண்டி வரும் 10-ம்தேதி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளில் பிரார்த்தனை செய்ய உள்ளேன்.

சசிகலா 2 ஆண்டுகளாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை தவிர, இணைப்பு முயற்சிக்குவேறு எதையும் செய்யவில்லை. தனிக் கட்சி தொடங்கியுள்ள டிடிவி.தினகரன், அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து எப்படி பேச முடியும்?

இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE