கோவை: மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியடப்பட்டுள்ளது.
கோவை மக்களவை தொகுதி ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. கோவை வடக்கு (3,37,958), கோவை தேற்கு (2,44,738), கவுண்டம்பாளையம் (4,70,293), சூலூர் (3,24,866), சிங்காநல்லூர் (3,30,514), பல்லடம் (3,97,755) உள்ளிட்ட பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மொத்த வாக்குப் பதிவு 64.81 சதவீதமாகும். தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் பேரவைத் தொகுதி வாரியாக அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி பல்லடம் தொகுதியில் அண்ணாமலை (பாஜக) 76,333, சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக) 51,260, கணபதி ராஜ்குமார் (திமுக) 1,14,139 வாக்குகளை பெற்றுள்ளனர். சூலூரில், பாஜக 75,501, அதிமுக 52,962, திமுக 96,019 வாக்குகளைப் பெற்றுள்ளன. கவுண்டம்பாளையத்தில், பாஜக 1,04,549, அதிமுக 52,110, திமுக 1,29,009 வாக்குகளைப் பெற்றுள்ளன. கோவை வடக்கு, பாஜக 71,174, அதிமுக 28,998, திமுக 80,963 வாக்குகளைப் பெற்றுள்ளன. கோவை தெற்கு, பாஜக 53,579, அதிமுக 19,044, திமுக 61,929 வாக்குகளைப் பெற்றுள்ளன. சிங்காநல்லூர் பாஜக 66,472, அதிமுக 31,229, திமுக 83,369 வாக்குகளைப் பெற்றுள்ளன.
» காஞ்சிபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு வங்கி உயர்வு
» குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்ற 841 அக்னி வீரர்கள் சத்திய பிரமாணம்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளில், பாஜக 4,47,608. அதிமுக 2,35,603. திமுக 5,65,428 வாக்குகள் பெற்றுள்ளனர். மொத்த தபால் ஓட்டுக்களில், பாஜக 2,524. அதிமுக 887. திமுக 2,772 வாக்குகளை பெற்றுள்ளன.