பிரியாணி

By காமதேனு

கே.ஆனந்தன்
anandkanandan@gmail.com

அந்த கம்ப்யூட்டர் சென்டரில் ஒரு கம்ப்யூட்டரை சர்வீஸ் செய்துகொண்டிருந்த கணேஷ், மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் சிணுங்கியதும் அதை எடுத்தான். மறுமுனையில் அவன் மனைவி விமலா.

“சொல்லு விமலா…” என்றான்.

“ஏங்க… எனக்கு மட்டன் பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. வர்றப்போ வாங்கிட்டு வர்றீங்களா?” என்றாள்.
மறுபேச்சில்லாமல், “சரிம்மா” என்றான். கர்ப்பிணி மனைவி ஆசைப்பட்டுக் கேட்பதை மறுக்காமல் வாங்கித் தர வேண்டுமே என்று நினைத்துக்கொண்டவனின் கை அனிச்சையாகப் பாக்கெட்டைத் தடவியது. பாக்கெட்டில் ஒரே ஒரு பத்து ரூபாய் நோட்டுதான் இருக்கிறது என்பது அப்போதுதான் கணேஷுக்கு உறைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE