விஜயலக்ஷ்மி
vijaya9.madurai@gmail.com
“ஹேய்… செல்லக்குட்டி! ஹேப்பி பர்த் டே கண்ணா” என்று இரண்டு வயது யாதவைப் பிருத்வி கொஞ்ச… குழந்தை கன்னத்தில் குழி விழ, ‘ப்பா...’ என்று மழலைச் சிரிப்புடன் அவன் கன்னத்தைத் தடவியது.
“கொஞ்சினது போதும்… சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. கோயிலுக்குப் போகணும்” என்று செல்ல
மாக அதட்டிய வினிதா, இளம் சிவப்பு நிற டிசைனர் புடவை, அதற்குப் பொருத்தமான நகைகளுடன், சுருள் சுருளான முடியை ஹேர் பேண்ட் போட்டு அடக்கி, தலை நிறைய பூவுடன் தேவதையாக வந்து நின்றாள். ஒரு கணம் கண்கள் விரிய நின்ற பிருத்வி, “வாவ்'' என்று அவளை நெருங்கினான்.
“ஷ்… முதல்ல குழந்தையைக் கொடுங்க” என்று குழந்தையை வாங்கிக்கொண்டு, அவனை பாத்ரூமில் தள்ளினாள்.
கிளம்பும்போது வினிதா கேட்டாள், “சிறுவர் காப்பகத்துக்கு லஞ்ச் ஏற்பாடு பண்ணிட்டிங்களா?”