நாமக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 1,089 வாக்குகள் முன்னிலை

By கி.பார்த்திபன்

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 1,089 ஓட்டுகள் முன்னிலை பெற்றுள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

தொகுதி வாக்கு எண்ணும் மையம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, தேர்தல் பார்வையாளர்கள் ஹர்குன்ஜித்கவுர், ஓனில் கிளமெண்ட் ஓரியா ஆகியோர் முன்னிலையில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

தொடர்ந்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. நாமக்கல் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதல் சுற்று எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி தன்னை அடுத்து வந்த திமுக கூட்டணி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரனை விட 1,089 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் தமிழ்மணி பெற்ற ஓட்டுகள்: 24,018. 2வது இடம் பெற்ற கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் பெற்ற ஓட்டுகள் 22,929. பாஜக வேட்பாளர் ராமலிங்கம் 5,032, நாதக 4,566 ஓட்டுகள் பெற்றனர். நோட்டாவில் 621 ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE