பவித்ரா நந்தகுமார்
pavithranandakumar79@gmail.com
“நல்ல காலம் பொறக்குது…நல்ல காலம் பொறக்குது இந்தப் பள்ளிக்கோடத்துக்கு… நல்ல காலம் பொறக்குது
புது தலைமையாசிரியை மேடம் வந்த ராசி புள்ளைங்க எல்லாம் நல்லா படிச்சி ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆகப் போகுதுங்க…
ஜெய் ஜெக்கம்மா…”
இப்படி கையில் குடுகுடுப்பையுடன் வார்த்தைகளை ஏற்ற இறக்கத்துடன் பேசி, மாறுவேடப் போட்டியில் முதல் பரிசு வாங்கிவிட்டான் ஆகாஷ். வித்தியாசமான தலைப்பாகை, பழைய கோட்டு சகிதம் மேடைக்கு அவன் வந்ததுமே கைத்தட்டல்கள் அரங்கை நிறைத்தன.
“அசல் குடுகுடுப்பைக்காரனையே நம் கண்முன் கொண்டு வந்து காட்டிவிட்டான்” என ஆகாஷை நடுவர் பாராட்டித் தள்ளிவிட்டார். பள்ளித் தோழர்களும் அவனைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்தினர். வழக்கமாக சற்றே நிசப்தத்துடன் பயணிக்கும் பள்ளி வேன், ஆரவாரங்களுடன் பள்ளியிலிருந்து கிளம்பியது. போட்டியைக் காண வீட்டிலிருந்து யாரும் வராததுதான் அவனுக்கு வருத்தமாக இருந்தது.
அதேசமயம், இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த பாட்டி விசாலாட்சியை நினைக்கும்போது அந்த வருத்தம் மறைந்தது. வீட்டிற்குப் போனதும் பாட்டியின் கைகளில் இந்தப் பரிசை கொடுத்து அவளுக்கு ஒரு அன்பு முத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.