லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
நாக்கில் சனி எப்போது குடிபெயரும் என்பது யாருக்கும் தெரியாது. கோபால ஐயருக்கு அந்த நிமிடம் அதுதான் நடந்தது. ஒரு அற்புத மாலைப் பொழுதில், சாப்பிட்ட சுகத்திற்கு சாட்சியாக ஒரு சின்ன ஏப்பத்துடன், காமு மடித்துக் கொடுத்த வெற்றிலையை வாயில் அதக்கி, ஊஞ்சல் கிறீச்… கிறீச்சுக்கு ஏற்ற லயத்தோடு வாயில் வைத்துக் கடித்தபடி அந்தப் பேச்சை ஆரம்பித்த நேரம் சனி வாகாக குடிபுகுந்து சம்மணமிட்டு அமர்ந்தது.
“காமூ… கையிலே ரிடையர்மென்ட் தொகை கணிசமா வரும்டீ. உருப்படியா இன்வெஸ்ட் செஞ்சு வச்சுட்டா, நான் போய்ச் சேர்ந்தாலும் நீ சிரமப்படாம இருப்பே.”
அனிச்சையாக வெற்றிலை மடித்துக் கொடுக்க வந்த கைகளை இழுத்துக்கொண்டு, தாலியைப் புடவையுடன் அழுத்திப் பிடித்துக்கொண்டாள் காமு.