நெப்ரான் உறவு

By காமதேனு

அண்டனூர் சுரா
rajamanickam29583@gmail.com

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டைவிட்டுக் கிளம்பியிருந்தோம். சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் சொன்ன அத்தனை சோதனைகளும் செய்தாகிவிட்டன. மலம், சிறுநீர், ரத்தம்... இத்யாதிகள். இன்றைக்கு பரிசோதனை அறிக்கைகள் கையில் கிடைத்தவுடன் அடுத்து அறுவை சிகிச்சைதான். அறுவைசிகிச்சை செய்துகொள்வது ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை என்றாலும், அதற்கு முந்தைய அத்தனை சோதனைகளையும் தனியார் மருத்துவமனையில் எடுக்க வேண்டியிருந்தது. சிறுநீரக அறுவைசிகிச்சைக்குப் பெயர் போன மருத்துவமனை அது. காலையிலேயே கூட்டம் நிரம்பிவழிந்தது.

நான் பி.எஸ்சி நர்ஸிங் முடித்து அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிபவள். “உங்கம்மா எப்ப கூப்பிட்டாலும் அவங்க கூட போய்ட்டுவா” என்று கணவர் சுரேஷ் சொல்லியிருப்பதால், நேற்று இரவே அம்மா வீட்டுக்கு வந்து தங்கிவிட்டேன். காலையில், எங்களுடன் அண்ணனும் கிளம்பிவந்தான். நான் அம்மாவை அழைத்துகொண்டு இந்த மருத்துவமனைக்கு வருவது ஏழாவது முறை. ஒவ்வொரு முறையும் அண்ணனைக் கூடவே அழைத்து வந்திருந்தோம்.

காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தவர்களில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. மருத்துவமனைக்கே உரிய பிரத்யேகமான பினாயில் வாசனை நாசியை நிறைக்க, அங்கே ஒரு கனத்த மவுனம் வியாபித்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE