சென்னை: தமிழ்நாடு பிராணிகள் நலவாரியம் சார்பில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இதில்மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று தடுப்பூசிசெலுத்தும் பணியை தொடங்கிவைத்தார்.
அப்போது தெரு நாய்கள்மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கமாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிராணிகளை வளர்ப்போர் பாதுகாப்பற்ற முறையில் அவற்றை வெளியில் கொண்டு சொல்லக் கூடாது என பலமுறை எச்சரித்தும் அலட்சியமாக உள்ளனர். நாயைநாய் என்று சொல்லக் கூடாது, குழந்தை என்று சொல்ல வேண்டும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர். நம் குழந்தையை, மற்றொருகுழந்தையை கடிக்கவிடுவோமா என அவர்கள் சிந்திக்க வேண்டும்.
விலங்குகள் நல ஆர்வலர்களுடன் கலந்துபேசி, நீதிமன்றத்தை அணுகி, எத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என முடிவெடுக்கப்படும்.
» சென்னை | கொல்கத்தா புறப்பட இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
» முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சங்கல்ப பூஜை
சென்னையில் கடைசியாக 2018-ம் ஆண்டு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது 57 ஆயிரம் நாய்கள் இருந்தன. தற்போது எங்களின் கணிப்பு படி, 2 லட்சத்துக்கு மேல் தெருநாய்களின் எண்ணிக்கை இருக்கும். விரைவில் விலங்குகள் நலவாரியத்துடன் இணைந்து ஒருமாதத்தில் அனைத்து வார்டுகளிலும் நாய்கள் கணக்கெடுப்பை தொடங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.