ஒறுத்தல்

By காமதேனு

ஜனநேசன்
rv.jananesan89@gmail.com

இவருக்கு அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது. இன்னும் காக்கை, குருவிகள் சத்தமோ, வீட்டில் வளர்க்கப்படும் சேவல் சத்தமோ கேட்கவில்லை. மனம் விழித்துக்கொண்டால் கண்களை மூடி எவ்வளவு நேரம் புரண்டுகொண்டிருக்க முடியும்? மெல்ல எழுந்து குளியலறைக்குப் போய் வந்தார். வீட்டில் எல்லாரும் நல்ல தூக்கத்தில் இருந்ததை, சீரான குறட்டை ஒலிகள் வெளிப்படுத்தின. இடது கண் துடித்தது. லேசாகத் தேய்த்து விட்டார். துடிப்பு அடங்கவில்லை. அப்படியென்றால்… இன்றைக்கு நல்ல செய்தி வரும். என்ன நல்ல செய்தி வரப்போகிறது? நாற்றம் பிடித்த வாழ்க்கையை மாற்றவா போகிறது? இரண்டு மகன்களும் பட்டப் படிப்பு முடித்து, கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டார்கள். வீட்டில் அக்காவும் மனைவியும் மட்டும்தான் அவரோடு இருக்கிறார்கள். சிறிய வாழ்க்கை வட்டத்தில் புதிதாக நல்ல செய்தி என்ன வந்துவிடப்போகிறது?

அந்தக் கேடுகெட்ட மிருகம் மட்டும் இவர்களது வாழ்க்கைப்பாட்டில் குறுக்கிடாதிருந்தால் இவர் நாற்றம் பிடித்த பிணக்கிடங்கில் சிக்கியிருக்க மாட்டார். பெரிய அளவில் சிக்கல் இல்லாத கிராம விவசாயப் பாட்டிலேயே வாழ்க்கை ஓடியிருந்திருக்கும். அன்று நடந்த சம்பவத்தை நினைக்கையில் அனல் கொப்பளிக்கும் பெருமூச்சு மூக்கின் நுனியையும் மேலுதட்டையும் சுட்டது. குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து விட்டார். உள்ளுறைந்த கங்கு கணகணத்தது.

மலையடிவாரக் காட்டில், கடலை விளைந்து பிடுங்கும் பக்குவத்தில் இருந்த நேரம் அது. அன்றைக்கு அவர் கடலைக் காட்டில் பரணில் காவலில் இருந்தார். ஊரடங்கி ஒரு சாமம் கழிந்து நரிகள் ஊளையிட்டுக்கொண்டிருந்தன. நிலாவை மேகம் மறைத்து அரையிருட்டாகக் கலங்கிக் கிடந்தது. அவர் சுற்றுமுற்றும் பார்வையைச் சுழற்றியபடி இருந்தார். ஊர் பக்கமிருந்து மங்கலாக ஓர் உருவம் ஓடிவருவது தெரிந்தது. பெண்ணுருவமாக இருந்தது. பார்வையைக் கூர்மைப்படுத்தினார். அது அக்காதான். என்னாச்சு, இந்தச் சாமத்திலே? மூன்று மாத கர்ப்பிணியான இவரது மனைவிதான் வீட்டில் இருந்தாள். அவளுக்கு என்னமும் பிரச்சினையா? மனசு நிலைகொள்ளவில்லை. இவர் இறங்கி அக்காவை நோக்கி ஓடினார். மூச்சுவாங்க ஓடிவந்த அக்கா, குரல் உடைந்த அழுகையினூடே ஏதோ சொன்னாள். ஒன்றும் விளங்கவில்லை. அவளது கைகளைப் பற்றி ஆசுவாசப்படுத்தி கேட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE