எம்.விக்னேஷ்
vignesh.madurai@gmail.com
கிறீச்…கிறீச்
அதிகாலை ஐந்தரை மணி. குருவிகளின் சத்தம் கேட்டுக் கண்விழித்த சாந்தி, அடுப்பை மூட்டினாள். பின்னர், ஒரு தட்டில் தினை தானியத்தையும், ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீரையும் எடுத்து ஜன்னலில் உள்ள முகப்பில் வைத்தாள். அதற்குள் வெளிச்சம் வந்துவிட, குருவிகள் தினையைக் கொத்த ஆரம்பித்தன. மகள் சுதா திருமணமாகி சென்னை சென்றவுடன், திருமங்கலம் வீட்டில் இந்த மூன்று வருடங்களாக இப்படிக் குருவிகள் துணையோடுதான் சாந்தியின் வாழ்க்கை விடிகிறது. சாந்தியின் கணவர் செல்வம் பலசரக்குக் கடை வியாபாரத்தில் மும்முரமாக இருப்பவர். 12-ம் வகுப்பு படிக்கும் மகன் அருண், பள்ளி, டியூஷன் என்று வீட்டிலேயே இருக்க மாட்டான்.
பெரும்பாலான நேரத்தைத் தனிமையில் கழிக்கும் சாந்தி, டிவி பார்ப்பதைவிட, குருவிகள் பறப்பதையும் தங்கள் மொழியில் சம்பாஷித்துக்கொள்வதையும் ரசித்துக்கொண்டிருப்பாள்.