கண்ணுக்குத் தெரியாத கருணை! - ஏழைகளின் பசியாற்றும் சுலைமான் - சிவாண்ணா

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

அரசுப் பொது மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கும், அவர்களுடன் தங்குபவர்களுக்கும் தினசரி அன்னதானம் வழங்கப்படுவதைத் திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் பார்க்க முடியும். கோவை அரசுப் பொது மருத்துவமனையிலும் அப்படியான அன்றாட அன்னதானம் நடக்கிறது. ஆனால், இதை நடத்துபவர்களின் பின்னணியில் நல்லிணக்கத்துக்கான நம்பிக்கையை வழங்கும் சுவாரசியமான கதையும் இருக்கிறது. என்ன கதை அது?

கோவை அரசுப் பொது மருத்துவமனையின் கிழக்குப் புறச் சுற்றுச்சுவரின் வாசலில், தினந்தோறும் மதியம் 12 மணிக்கு நீண்ட வரிசை நின்றுவிடுகிறது. சில நிமிடங்களில் ஒரு ஆம்னி வேன் அங்கே வந்து நிற்கிறது. அதிலிருந்து நான்கைந்து பேர் பெட்டி பெட்டியாகச் சாப்பாட்டுப் பொட்டலங்களைச் சுடச்சுட இறக்குகிறார்கள். கூட்டம் பரபரக்கிறது. சற்று நேரத்தில் வரிசையில் நின்றவர்களுக்குச் சாப்பாட்டுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. வரிசையை ஒழுங்குபடுத்தியபடி, அனைவருக்கும் சாப்பாட்டுப் பொட்டலங்கள் கிடைக்கின்றனவா என்று கண்காணித்துக்கொண்டிருக்கிறார் சுலைமான்.

அன்றாடம் தொழுகை செய்ததற்கான அடையாளமாக நெற்றியில் மெலிதான தழும்பு, பழுப்பு நிற தாடி, மீசை சகிதம் இருக்கும் சுலைமானுடன் பேசினால், “இந்தச் சாப்பாட்டை நான் சப்ளை மட்டும்தான் செய்யறேன். ஆனா, இதைக் கொடுக்கிறது சிவாண்ணா” என்று சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்.

“எப்படி ஆரம்பித்தது இந்தச் சேவை?” என்று கேட்டதும், அந்தக் கதையை விரிவாகச் சொல்லத் தொடங்குகிறார் சுலைமான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE