ஆன்லைன் அலப்பறை!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

ரொம்ப நேரமா வீட்டம்மிணியைக் காணோம். குரல் மட்டும் கேட்டுச்சு. எந்த வீட்டுலன்னு போய்ப் பார்க்கிறது... சலிச்சுப்போய் டிவியை ஆன் பண்ணா... “பல சரக்கு உலகின் புதிய பார்ட்னர்”னு விஜய் சேதுபதி வந்தாரு. அந்த நேரம் பார்த்து அம்மணி உள்ர வந்தாங்க. “சூப்பர் சகுனம்”னு குதூகல கத்தல்!

நான் வழக்கம் போல ஒண்ணும் புரியாம முழிச்சேன். “இப்பதான் பேசிட்டு வரேன்... அவங்க வீட்டுல எல்லாமே ஆன்லைன் பர்ச்சேஸ்தானாம். வீட்டுல கொண்டாந்து கொடுத்துருவாங்களாம். நாம சிரமப்படவே வேணாம்னு சொல்றாங்க”ன்னு அம்மணி ஆரம்பிச்சாங்க. நான் நிதானமா சொன்னேன். “நமக்குத்தான் எல்லாமே இருக்குதே... இன்னும் என்ன வாங்கணும்... அவங்க புதுசா கல்யாணம் ஆகி வந்துருக்காங்க. தேவை இருக்கு. வாங்கறாங்க.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE