இயற்கை காதலன் மோனே

By காமதேனு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

பிரெஞ்ச் இம்ப்ரஷனிச ஓவியங்களின் தந்தை, நிறுவனர் என்று போற்றப்படு பவர் ஆஸ்கர் கிளாட் மோனே. 

இவரைப் போல் இயற்கையை ஆழ்ந்து நேசித்து வரைந்தவர்கள் இல்லையென்று சொல்லும் அளவுக்கு இவருடைய ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றிருக்கின்றன.

இயற்கையை மிகத் துல்லியமாக பார்வையாளர்களுக்குக் கடத்துபவை மோனேயின் ஓவியங்கள். இயற்கை தனக்குள் ஒளித்துவைத்திருக்கும் சின்னச் சின்ன விஷயங்களைத் தத்ரூபமாக ஓவியங்களில் கொண்டுவந்துவிடும் திறமைமிக்கவர் இவர். அதேபோல் ஓவியங்களில் இவர் பயன்படுத்தும் வண்ணங்கள் அந்தக் காட்சியின் மனநிலையை வெளிப்படுத்தும் வகை
யில் இருக்கும். இயற்கையின் பேரமைதியாக இருக்கட்டும், இயற்கையின் பிரமிக்கத்தக்க சக்தியாக இருக்கட்டும். அது இவருடைய வண்ணங்களின் வழியே கடத்தப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE