திருத்தணி பகுதியில் கனமழை: சுட்டெரித்த வெயிலில் வாடிய மக்கள் மகிழ்ச்சி

By KU BUREAU

திருத்தணி: தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டிவதைத்து வந்தது. திருவள்ளூர்மாவட்டம், திருத்தணியில் பலநாட்கள் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கார்த்திகேயபுரம், காசிநாதபுரம், முருகம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை கனமழைபெய்தது. இடி மின்னலுடன் கூடிய மழை, ஒரு மணி நேரத்துக்கு மேல் பெய்தது.

இது வெயிலில் வாடி வந்ததிருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்தகன மழையால், திருத்தணி-சென்னை சாலையில் மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து சுமார் 2 அடி உயரத்துக்கு சாலையில் ஓடியதால் பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் சிறிதுநேரம் அவதிக்குள்ளாகினர்.

இதேபோல், மதுராந்தகம், கருங்குழி, மேலவளம்பேட்டை, மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், செய்யூர், இடைக்கழிநாடு, கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE